Banking News

உங்களுடைய பான் கார்டு உடன் ஆதார் இணைக்கபட்டுவிட்டதா? கடைசி வாய்ப்பு

Spread the love

உங்களுடைய பான் கார்டை ஆதார் கார்டுடன் இணைத்துவிட்டிர்களா? இணைக்காதவர்களுக்காக இதோ எட்டாவது முறையாக தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.

பான் (PAN) கார்டுடன் ஆதார் அட்டையை இணைப்பதற்கான காலக்கெடுவை வருமான வரித்துறை மீண்டும் நீட்டித்துள்ளது.

2019 ம் ஆண்டு அரசியலமைப்பு தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பின் பின்னர் வருமான வரி தாக்கல் செய்ய மட்டுமல்ல நிரந்தர கணக்கு எண் (PAN) கார்டுடன் 12 இலக்க ஆதார் எண்ணும் கட்டாயம் தேவை என கூறியுள்ளது.

எனவே காலக்கெடு முடிவடைவதற்குள் உங்கள் பான் கார்டை ஆதார் எண்ணுடன் இணைத்துவிடுங்கள்.

பான் கார்டு மற்றும் ஆதார் கார்டு இணைப்பில் சில முக்கியமான விஷயங்களை நாம் நினைவில் கொள்ள வேண்டும் அதை பற்றி பார்ப்போம்

நீங்கள் ஒரு புதிய பான் கார்டுக்கு விண்ணப்பிக்கிறீர்கள் என்றால் விண்ணப்பிக்கும் போதே நீங்கள் உங்கள் ஆதார் எண்ணை தர வேண்டியது கட்டயாம்.

எனவே அப்பொழுதே உங்கள் பான் கார்டுடன் ஆதார் எண் இணைக்கபட்டுவிடும், நீங்கள் தனியாக ஆதார் எண்ணை பான் கார்டுடன் இணைக்க தேவை இல்லை.

ஏற்கனவே பான் கார்டு வைத்து இருந்தால், அதை ஆதார் கார்டுடன் இணைப்பது கட்டாயம் ஆகும்.

ஆதார் எண்ணை இணைப்பதற்கு வருமான வரி துறையின் இணையத்திலோ அல்லது எஸ்எம்எஸ் மூலமோ இதை செய்யலாம்.

சரியாக ஆதார் எண்ணை இணைத்துள்ளோமா என்பதனையும் வருமான வரித்துறையின் இணைய பக்கத்தில் சரிபார்க்கலாம்.

வருமான வரி செலுத்துவோர் பலர் இன்னும் தங்களது பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்கவில்லை என்பதால் காலக்கெடு எட்டாவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

எனவே 31 டிசம்பர் 2019 இல் இருந்து 31 March 2020 வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது

வரி ஆலோசகர் ஒருவர் இதை பற்றி கூறும்போது:

தொழில் செய்யும் பலர் இன்னும் தங்களது பான் கார்டுடன் ஆதார் எண்ணை இன்னும் இணைக்காமல் உள்ளனர்.

ஏன் என்றால் ஆதார் எண் அனைத்து வகையான ஆவணங்களையும் குறிப்பாக பாஸ்போர்ட் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை போன்ற ஆவணங்களையும் பெறுவதற்கு பயன்படுத்தப்படுகிறது.

மேலும் சொத்துக்கள் மற்றும் வாகனங்கள் வாங்குவதற்கும் ஆதார் எண்ணை கொடுப்பதாலும், ஆதார் எண்ணை பான் கார்டுடன் இணைத்தால் தங்களது அனைத்து தகவல்களும் வருமான வரித்துறைக்கு தெரிந்துவிடும் என அஞ்சுவதாக கூறியுள்ளார்.

காலக்கெடு முடிவடைந்தும் பான் கார்டு மற்றும் ஆதார் இணைக்கவில்லை எனில் இணைக்கப்படாத அனைத்து கார்டுகளும் செயல்படாதவை என அறிவிக்கப்படலாம்.

எனவே உங்களால் வருமான வரி தாக்கல் செய்ய முடியாது.

எட்டாவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ள இந்த வாய்ப்பை பயன்படுத்தி நீங்கள் உங்க ஆதார் எண்ணை பான் கார்டுடன் இணைத்து விடுங்கள்.

வருமான வரி துறையின் நடவடிக்கைக்கு ஆளாக வேண்டாம்.