Banking News

கொரோனா எதிரொலி, எஸ்பிஐ அறிவிப்பு: பேலன்ஸ், மினி ஸ்டேட்மென்ட் பெறுவது ஈஸி

Spread the love

கொரோனா பாதிப்பின் காரணமாக எஸ்பிஐ தனது வாடிக்கையாளர்கள் வங்கி கிளைக்கு தேவையில்லாமல் வருவதை தடுக்கும் வகையில் பேலன்ஸ், மினிஸ்டேட்மென்ட், செக் புக் மற்றும் சில வசதிகளை மிஸ்டு கால் மற்றும் எஸ்எம்எஸ் மூலம் பேங்கிற்கு செல்லாமல் தெரிந்து கொள்ளும் வசதியை ஏற்படுத்தியுள்ளது.

பணம் டெபாசிட் செய்யவோ, பணம் எடுக்கவோ, காசோலைகள் தொடர்பான சேவைகள், பணம் அனுப்புதல், அரசாங்க பரிவர்த்தனைகள் தொடர்பான சேவைகளுக்கு மட்டுமே பேங்கிற்கு வாடிக்கையாளர்கள் வர முடியும் என தெரிவித்துள்ளது.

அத்தியாவசியமற்ற சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதால் இதற்கு வாடிக்கையாளர்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் எனவும் கூறியுள்ளது. இதன்படி பாஸ்புக் என்ட்ரி மற்றும் வங்கி கணக்கு ஸ்டேட்மென்ட் பிரிண்டிங் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.

இது தொடர்பான சேவைகளை ஆன்லைனில் தெரிந்துகொள்ள எஸ்பிஐயின் யோனா ஆப் இன்ஸ்டால் செய்து கொள்ளும் படி கூறியுள்ளது.

யோனா ஆப் மூலம் நமது பரிவர்த்தனை தொடர்பான விவரங்கள் அனைத்தையும் பார்த்துக்கொள்ளலாம் எனவும் , பரிவர்த்தனைகளையும் செய்துகொள்ளலாம் எனவும் கூறியுள்ளது.

இதன் மூலம் வங்கி கிளைக்கு வாடிக்கையாளர்கள் வருவதை குறைக்க முடியும் என எஸ்பிஐ நம்புகிறது.

கீழ்காணும் சேவைகளை அந்த அந்த குறுந்தகவல்கள் மூலம் பெற்று கொள்ளலாம் என எஸ்பிஐ வங்கி கிளைகளில் நோட்டீஸ் வைக்கப்பட்டுள்ளது.

Service

SMS / Missed Call

REGISTERATION: REGAccount Number
Balance Enquiry “BAL” to 09223766666
Mini Statement “MSTMT” to 09223866666
cheque Book Request “CHQREQ” to 09223588888
E-statement “ESTMAccount Number “to 09223588888
Education Loan Interest certificate “ELI Account Number ” to 09223588888
Home Loan Interest certificate “HLI Account Number ” to 09223588888
Home Loan Interest certificate “HLI Account Number ” to 09223588888
Block SBI ATM Card “BLOCK Account Number “to 567676
Block SBI ATM Card “BLOCK Account Number ” to 567676
Green PIN Facility “PIN ” to 567676

எனவே வாடிக்கையாளர்கள் இந்த முறைகளை பயன்படுத்தி வங்கிகளுக்கு செல்வதை குறைத்துக்கொள்வார்கள் என நம்புவோம்.