Account Maintenance

SBI: KYC விவரங்கள் இல்லாத உங்கள் வங்கி கணக்குகள் முடக்கப்படும் அபாயம்!

Spread the love

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் கணக்கு வைத்து இருப்பவர்களில் KYC விவரங்களை இது வரை சமப்பிக்காதவர்களின் கணக்குகள் முடக்கப்படும் என ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா அறிவித்துள்ளது.

எனவே எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் உடனே தங்களது KYC விபரங்களை பதிவு செய்யவோ அல்லது புதுப்பிக்கவோ செய்யுமாறு எஸ்பிஐ தனது வாடிக்கையாளர்களை கேட்டுக்கொண்டுள்ளது. அதன்படி உடனடியாக விவரங்கள் இல்லாத வாடிக்கையாளர்களுக்கு ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா சார்பில் குறுந்தகவல் மூலமாக எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

அதன்படி உடனடியாக வாடிக்கையாளர்கள் விவரங்களை பதிவு செய்வது கட்டாயம் என கூறப்பட்டுள்ளது.

கடைசி தேதி

28-02-2020 க்கு முன்னதாக அனைத்து வாடிக்கையாளர்களும் தங்களது KYC விவரங்களை புதுப்பித்து இருக்க வேண்டும் என ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா கூறியுள்ளது.

KYC விவரங்களை சமர்பிக்க வாடிக்கையாளர்கள் தங்களுக்கு அருகாமையில் இருக்கும் எஸ்பிஐ வங்கி கிளையை தொடர்பு கொள்ள வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

நேரில் செல்ல வேண்டுமா?

காலக்கெடு முடிவடைவதற்குள் KYC பதிவு செய்யாத அனைத்து வாடிக்கையாளர்களும் வங்கி கிளைக்கு நேரில் சென்று தங்கள் ஆவணங்களை சமப்பித்து KYC புதுப்பித்து கொள்ள வேண்டும்.

புதுப்பிக்க தேவையான ஆவணங்கள்

  • ஆதார் அட்டை
  • பாஸ்போர்ட்
  • வாக்காளர் அடையாள அட்டை
  • ஓட்டுனர் உரிமம்
  • பான் அட்டை

இந்த ஆவணங்களில் ஏதாவது ஒன்றின் நகலுடன் தங்களது புகைப்படம் மற்றும் தொலைபேசி எண்ணையும் சமர்பிக்க வேண்டும் என கூறியுள்ளது. சமர்பிக்காத வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கு முடக்கப்படும் என எச்சரித்துள்ளது.

எஸ்பிஐ வங்கியின் இணையதளத்தில் இது தொடர்பான சந்தேங்களுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் என்னென்ன ஆவணங்கள் தேவை என்பது போன்ற தகவல்களுக்கு விளக்கம் கொடுத்துள்ளனர்.

எனவே உங்கள் வங்கி கணக்கு முடக்கப்படாமல் இருக்க உடனே உங்களது KYV விவரங்களை அருகாமையில் இருக்கும் எஸ்பிஐ வங்கி கிளையில் சமர்ப்பிக்கவும்.