ATM

ATM கார்டு விதிகளில் அதிரடி மாற்றம் மார்ச் 16 முதல்

Spread the love

டெபிட் கார்டு மற்றும் க்ரெடிட் கார்டுகளின் பாதுகாப்பை அதிகரிக்க இனி கார்டு உரிமையாளர்களே எந்த எந்த சேவைகளை பயன்படுத்தலாம் எதை பயன்படுத்த வேண்டாம் என்பதை முடிவு செய்து கொள்ளலாம். சமீப காலமாக ஆன்லைன் பேங்கிங், மொபைல் பேங்கிங் என அனைவரும் பயன்படுத்தி வருகின்றனர்.

மளிகை கடை முதல் பெரிய நகை கடை வரை அனைவரும் கூகுள் பே, போன்பீ, பேடிம் மூலம் பணம் பெற்று வருகின்றனர்.

எனவே ATM கார்டு வைத்து இருப்போர் கார்டு மூலமும், மொபைல் பேங்கிங் வைத்து இருப்போர் QR கோடு மூலமும், பி ஓ எஸ் இயந்திரங்கள் மூலமும் பணம் செலுத்துகின்றனர்.

டெக்னாலஜி எவ்வளவு வேகமாக வளர்ந்து வருகிறதோ அதே வேகத்தில் ஆபத்தும் வளர்ந்து வருகிறது.

ATM கார்டு மோசடிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனை கருத்தில் கொண்டு ஆர்பிஐ அனைத்து வாடிக்கையாளர்களின் ATM மற்றும் மொபைல் பேங்கிங் வசதியில் சில மாற்றங்களை கொண்டு வர உள்ளது.

டெபிட் கார்ட் மற்றும் க்ரெடிட் கார்ட் பயன்படுத்துபவர்கள் தங்கள் எந்த சேவைகளை பயன்படுத்த வேண்டும், எதனை பயன்படுத்த வேண்டாம், எவ்வளவு வரை செலவு செய்யலாம் என்பதை தாங்களே தீர்மானித்து கொள்ளும் வகையில் புதிய வசதியை ஏற்படுத்த வேண்டும் என கூறியுள்ளது.

அது என்ன புது வசதி என்பதை பார்ப்போம்.

புது வசதி

நாம் ஒரு டெபிட் கார்டு வைத்து இருக்கோம் எனில் நாம் என்னவெல்லாம் தீர்மானித்து கொள்ளலாம் என்பதை பார்ப்போம்

  • டெபிட் கார்டு மூலம் ஒரு நாளைக்கு எவ்வளவு பணம் எடுக்கலாம்
  • பி ஓ எஸ் இயந்திரங்கள் மற்றும் மொபைல் பேங்கிங் பயன்படுத்தலாமா வேண்டாமா என்பதையும்
  • உள்நாடு மற்றும் வெளிநாட்டில் பணபரிமாற்றம் செய்யலாமா வேண்டாமா என்பதையும் நாமே தீர்மானிக்கலாம்

ஆர்பிஐ இதெற்கென விதிகளை வகுத்துள்ளதாகவும் தெரிகிறது.

விதிகள்

அணைத்து வகையான பரிவர்த்தனை முறைகளையும் கார்டு உரிமையாளர்களே தீர்மானித்துக்கொள்ளலாம்.

பணப் பரிவர்த்தனைகளுக்கான லிமிட்களை கார்டு உரிமையாளர்களையே நிர்ணயிக்க அதிகாரம் கொடுக்க வேண்டும்.

உள் நாடு மற்றும் வெளிநாட்டு பணப் பரிவர்த்தனைகள் இரண்டையும் வேணுமா வேண்டாமா என்பதையும் தீர்மானித்து கொள்ள அதிகாரம் கொடுக்க வேண்டும்.

வெளிநாட்டு பணப் பரிவர்த்தனைகளை இதுவரை செய்யாத டெபிட் கார்டுகளில் அந்த வசதியை நிறுத்தி வைக்க ஆர்பிஐ கூறியுள்ளது.

இந்த விதிகள் ப்ரீபெய்ட் கிஃப்ட் கார்டுகளுக்கு பொருந்தாது எனவும் என கூறப்படுகிறது.

இந்த புதிய சேவையை வங்கிகள் எல்லா விதமான முறையிலும் குறிப்பாக இணைய வங்கிச் சேவை, ஏடிஎம், ஐ வி ஆர், வங்கிக் கிளைகள் மற்றும் மொபைல் அப்ளிகேஷன் மூலமும் இந்த சேவையை வழங்க வேண்டும் என ஆர்பிஐ கூறியுள்ளது.

நமது க்ரெடிட் மற்றும் டெபிட் கார்டில் லிமிட் மற்றும் புதிய டிரான்சாக்‌ஷன் முறைகள் எது மாற்றம் செய்யப்பட்டாலும் நமக்கு குறுந்தகவல் மூலமாகவோ அல்லது இ மெயில் மூலமாகவோ தகவல் (Alert) தெரிவிக்க வேண்டும் என்பது கூடுதல் விதிமுறை.

மார்ச் முதல் நம்முடைய பணப்பரிவர்த்தனைகளின் அளவுகளை மற்றும் என்ன செய்யலாம் என்ன செய்ய கூடாது என்பதை நாமே தீர்மானித்துக்கொள்ளலாம்.

வங்கிகள் இதனை எப்படி நடைமுறைபடுத்த போகிறார்கள் என்பதனை பொறுத்திருந்து பார்ப்போம்.